பொருளாதார சுமை அதிகரித்து மக்கள் வெறுப்பின் உச்சத்தை தொட்டிருப்பதாக தெரிவிக்கிறார் பெரமுன முக்கியஸ்தரும் ராஜாங்க அமைச்சருமான விதுர விக்ரமநாயக்க.
வெறுப்பின் உச்சத்தில் உள்ள மக்கள் கையில் தடியெடுக்கும் காலம் நெருங்கி விட்டதாகவும் தெரிவிக்கும் அவர், ஜனாதிபதி தனி நபராக நாட்டை நிர்வகிக்க முடியாது எனவும் அவருக்கு தனிமையில் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமாக இருந்தால் அவர் பதவி விலகியாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் விரைவில் ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடாத்த நேரிடும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment