டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் விவசாயமும் இல்லை பட்டினியும் இல்லையென தெரிவிக்கிறார் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
நமது நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையுமில்லையெனவும் தெரிவிக்கும் அவர், விவசாயமில்லாத நாடுகளில் மக்கள் எவ்வாறு பட்டினியில் இல்லையோ அவ்வாறே ஏதோவொரு வகையில் உணவுத் தேவையை தீர்த்துக் கொள்ளலாம் எனவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், டொலர் பற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுவதாக தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment