எதிர்வரும் 10ம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியா பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்திர் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை திருகோணமலை எண்ணை தாங்கிகள் சிலவற்றை இந்தியா தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில் இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.
கடந்த தடவை பசில் ராஜபக்சவின் விஜயம் பலனற்றுப் போயிருந்ததாக பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் இலங்கைக்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த கடனை வழங்குமாறு சுப்பிரமணிய சுவாமி தமது அரசுக்கு அழுத்தங் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தகக்கது.
No comments:
Post a Comment