கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இலங்கையிடம் இருந்த 382.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம் டிசம்பர் இறுதியில் 175.4 மில்லியனாக குறைந்ததாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த காலப் பகுதியில் மத்திய வங்கி, கையிருப்பில் இருந்த தங்கத்தை விற்பனை செய்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தற்காலிக கையிருப்புகளின் வெளிநாட்டு பெறுமதியை மத்திய வங்கி தந்திரோபாய ரீதியில் மிகைப்படுத்தி கணக்குக் காட்டுவதாக ஹர்ஷ டிசில்வா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment