சிவில் மற்றும் அரசியல் நிர்வாக அனுபவமற்ற ஜனாதிபதிக்கு எதுவொரு விடயமும் தாமதமாகவே புரிகிறது என தெரிவிக்கிறார் அமைச்சர் விமலவீர திசாநாயக்க.
சுசில் பிரேமஜயந்த போன்று இவரும் பதவி நீக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அறிவாளிகள் மாத்திரம் கூடி நாட்டை மாற்ற முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேர்ந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதிக்கு விடயங்கள் புரியும் போது கால தாமதமாகி விடுவதாகவும் அதனாலேயே நாடு தற்போதுள்ள இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment