ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவை இலக்கு வைத்து தேசிய மக்கள் சக்தி கூட்டமொன்றில் வைத்து முட்டை வீசப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
கம்பஹா, கலகெடிஹேன பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணியில் பிரசன்னவே இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில், தனக்கும் அதற்கும் தொடர்பில்லையெனவும் இது தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணையை நடாத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment