முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடைமுறை அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டு வரும் நிலையில் அவரது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என விளக்கமளித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
2015ல் ஐக்கிய தேசிய முன்னணியின் உதவியோடு ஜனாதிபதியாக வந்த அவர், பின்னர் நடந்து கொண்ட விதம் நாடறிந்தது எனவும் 2020ல் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து பெரமுனவுடன் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் ரணில் தற்போது அதிலும் தவறு காண்கிறார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் அவர் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டால் தன்னைத் தானே விமர்சிக்கும் நிலையே எஞ்சியிருக்கும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment