செய்ய முடியாத வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என்று கூறி ஈற்றில் எதையும் சாதிக்க முடியாமல் நாட்டை அதாள பாதாளத்துக்குத் தள்ளியது தான் மிச்சம் என விசனம் வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரமும் இப்போது கடந்து விட்டது என தெரிவிக்கும் அவர், சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய எந்தவொரு சரியான தீர்மானமும் எடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இயலுமானவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சிறந்த தீர்வு என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment