இரண்டு ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு துப்பாக்கி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அமைச்சரவை அனுமதி ஏலவே பெறப்பட்டுள்ள போதிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத நிலையில், இயற்கை உரம் வழங்கப் போய் தான் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாக சுய விமர்சனம் செய்து வரும் மஹிந்தானந்த இத்திட்டத்தை துரிதப்படுத்த பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏலவே சுற்று நிருபமும் வெளியிடப்பட்டிருந்த போதிலும் துப்பாக்கி வழங்கும் நடவடிக்கை தாமதப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment