கொரோனா சூழ்நிலையில் ஜனாதிபதி 'இழந்த' இரு வருடங்களை அவருக்கு வழங்குவதற்கு ஏதுவாக நாடாளுமன்றில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளார் டயானா கமகே.
இனந்தெரியாத நபர் ஒருவர் தனக்கு வழங்கிய 'அறிவுரை' என இரண்டு வருட இழப்பு தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தார். இப்பின்னணியில் அவருக்கு கொரோனா கால இரண்டு வருடங்களை மீள வழங்க அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்படுவது குறித்தும் பேசப்படுகிறது.
எனினும், நாடாளுமன்றம் ஊடாகவே அதனை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என டயானா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment