பசிலின் பணத்திலேயே 'மல்வானை' வீடு: நீதிமன்றில் சாட்சி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 January 2022

பசிலின் பணத்திலேயே 'மல்வானை' வீடு: நீதிமன்றில் சாட்சி!


சர்ச்சைக்குள்ளான மல்வானை வீட்டை நிர்மாணத்துக்கான நிதியை பசில் ராஜபக்சவே தந்ததாக நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.


வருமானத்துறையினரின் விசாரணையின் போது தான் முற்படுத்தப்பட்ட போதிலும் அதற்கான முதலீடு பசில் ராஜபக்சவுடையது என சாட்சியாக ஆஜரான முதித ஜயகொடி தெரிவித்துள்ளார்.


வழக்கின் விசாரணை மார்ச் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தினத்தில் பசில் மற்றும் மைத்துனர் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment