பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அது வெகுவாக மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் திலும் அமுனுகம.
இந்நிலையில், இவ்விதி மீறலில் ஈடுபடும் பேருந்து சாரதிகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் எனினும் கிராமப்புறங்களில் தொடர்ந்தும் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கான 'கட்டண' வரையறை போன்றே நின்று பயணிப்போருக்கான கட்டணக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment