இலங்கை - குவைத் இடையிலான விமான சேவை தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது குவைத் விமான சேவை நிறுவனம்.
2020 கொரோனா சூழ்நிலையிலும் இலங்கைக்கான விமான சேவையை குவைத்தே முதலில் நிறுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போதும் கொரோனா நிமித்தமே இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான குவைத் விமான சேவை அலுவலக முகாமையாளர் விளக்கமளித்துள்ளார்.
1975 முதல் இலங்கைக்கான விமான சேவை இடம்பெறுவதாகவும் விரைவில் நல்ல முடிவொன்று அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment