அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசிய நிலையில் பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த விவகாரம் பெரமுன மட்டத்தில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சுசிலை பதவி நீக்கிய விடயம் பிரதமருக்கு பின்னரே தெரிய வந்ததாகவும் அதுவும் செய்திகளைப் படித்து விட்டு மனைவி சிரந்தி ராஜபக்ச சொல்லித்தான் அறிந்து கொண்டதாகவும் பிரதமர் தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் சுசிலுக்கு தொலைபேசியில் பிரதமர் 'அனுதாபம்' தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment