மஹிந்த ராஜபக்ச விரைவில் பிரதமர் பதவியை விட்டு விலகப் போவதாக தொடர்ச்சியாக வெளியாகி வரும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
ஓய்வு பெறும் தேவை தனக்கு இன்னும் இல்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பசில் ராஜபக்ச பிரதமர் பதவியைத் தனக்குத் தருமாறு அழுத்தங் கொடுத்து வருவதாகவும் இப்பின்னணியில் மஹிந்த பதவி விலக எத்தனிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் நிலவி வரும் பேச்சுக்களின் பின்னணியில் பிரதமர் தரப்பு இம்மறுப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment