இலங்கையில் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பில்லையெனவும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை திருப்தியாக இல்லையெனவும் சுற்றுலாப் பயணிகளுக்கு கனேடிய அரசு எச்சரித்துள்ளமை தொடர்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு விசனம் வெளியிட்டுள்ளது.'
காலாவதியான தரவுகளை வைத்துக் கொண்டு கனேடிய அரசு இவ்வாறு இலங்கையின் நன்மதிப்பைக் குறைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்த வாரமும் தேவாலயத்தில் 'கைக்குண்டு' மீட்பின் பின்னணியில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனை இந்த அரசாங்கமே கையாண்டு வருவதாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment