இவ்வருடம் அமைச்சரவையில் மாற்றம் நிகழவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில தற்போதைய அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என விமல் தரப்பு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது.
யுகதனவி விவகாரத்தில் விமல் - கம்மன்பில - வாசுதேவ அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் ஏலவே ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அதேவேளை குறித்த நபர்கள் அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதாகவும் பதவி விலக வேண்டும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.
எனினும், தாமாக விலகப் போவதில்லை தேவையாயின் பதவி நீக்கலாம் என கம்மன்பில சவால் விடுத்திருந்மை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment