ரயில்வே திணைக்களம் கடந்த வருடம் 9 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் வருமானம் குறைந்த அதேவேளை செலவீனங்கள், குறிப்பாக ஊதியம், பராமரிப்பு உட்பட்ட செலவுகள் வருவாயை விட அதிகம் இருந்ததால் இந்நிலையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ள நிலையில் இலங்கையின் கடன் பெறும் தகுதியும் குறைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதிலும் இடர்பாடு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment