எரிபொருள் விநியோகத்தை சீராகப் பெற ஆரம்ப கட்டத்தில் 500 மில்லியன் டொலர் தேடி வந்த அரசு, இவ்வருடத்தின் மொத்த எரிபொருள் தேவைக்கான செலவு 4 பில்லியன் டொலர் என மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் கொள்வனவுக்குத் தேவையான குறித்த தொகைப் பணத்தை 'தேடுவது' தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபன தவிசாளரின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி தலைமையில் இவ்வவசர சந்திப்பு நிகழ்ந்துள்ள அதேவேளை தற்காலிக தேவையான 500 மில்லியன் டொலரை வழங்குவதற்கு இந்தியா வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment