தள்ளாடிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சீர்படுத்த ஜப்பானிடம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கு அரசு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
டொலருக்கு நிகரான பெறுமதியில் 'யென்' பெற்றுக்கொள்ளவும் தயார் என இலங்கை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்தியாவின் கடன் வாக்குறுதியையடுத்து ஏனைய பணத் தேவையை நோக்கி அரசின் கவனம் திரும்பியுள்ள அதேவேளை தமது ஆட்சிக்காலத்தில் ஒரு சதமேனும் கடன் எடுக்கவில்லையென ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment