எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு தேவையான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜய்சங்கர்.
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் ஜய்சங்கரும் இணையமூடாக நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இது குறித்து பரிசீலித்து தகுந்த நடவடிக்கையெடுப்பதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தான் வாக்குறுதியளித்துள்ளதாக இந்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மறுபுறத்தில் சீனாவிடம் பெற்ற கடனையடைக்க புதிய கடன் ஒப்பந்தத்துக்குள் செல்வதற்கும் இலங்கை தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment