முன் கூட்டியே விசா பெறும் தேவையின்றி பயணிக்கக் கூடிய கடவுச்சீட்டுகள் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.
ஹென்லி நிறுவனத்தால் வெளியிடப்படும் இப்பட்டியலில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான தரப்படுத்தலிலேயே இலங்கை, லெபனான் மற்றும் சூடானுக்கு 102வது இடமும், பங்களதேஷுக்கு 103வது இடமும் வட கொரிய கடவுச்சீட்டுக்கு 104வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகளைக் கொண்டு 192 நாடுகளுக்கு முன் கூட்டிய விசா இன்றி பயணிக்க முடியும் எனும் அடிப்படையில் குறித்த நாடுகள் முதலிடத்தைப் பெற்றுள்ளமையும் இலங்கைக் கடவுச்சீட்டைக் கொண்டு 41 நாடுகளுக்கு முன் கூட்டிய விசா பெறும் தேவையின்றி பிரயாணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment