நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்து, உலகின் மிக மோசமான பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
2022 மிக நெருக்கடியான கால கட்டமாக இருக்கப் போவதாகவும் அரசிடம் எவ்வித திட்டங்களும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளைப் பெறுவதற்கும் டொலர் இல்லாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்பங்களோடு வெளிநாடுகளுக்கு விடுமுறை செல்வதற்கு எங்கிருந்து டொலர் வருகிறது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனவரியில் ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையையும் நீக்குமானால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமாக பாதிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment