இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நேர்மையான எண்ணம் ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கிறார் பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க.
அப்படியொரு எண்ணம் இருந்தால் ஞானசாரவின் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டிருக்க முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக புதிய அரசியமைப்பை முன் வைக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லையெனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment