கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் அசியல் பின்னணியில் வேந்தராக நியமனம் பெற்ற முருத்தெட்டுவே ஆனந்த தேரின் கைகளால் பட்டச் சான்றிதழை வழங்க மறுத்த நிகழ்விலிருந்து அரசாங்கம் சரியான செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் ஒமல் பே தேரர்.
புத்திஜீவிகளின் வெகுவான பாராட்டைப் பெற்றுள்ள குறித்த நடவடிக்கை நீதியான வகையில் தமது கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக பதிவாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முக்கிய நிறுவனங்களில் பிரதான பதவிகள் அரசியல் ஊடாக நியமிக்கப்படும் போது கீழுள்ளவர்களுக்கு மௌனித்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையெனவும் ஆனாலும் மாணவர்கள் அதனை மிக ஒழுக்காமான முறையில் எதிர்த்து முன்னுதாரணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment