பாகிஸ்தானில் கொலையான இலங்கையரான பிரியந்த குமாரவின் மாதாந்த ஊதியத்தை அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் பாக். பிரதமர் இம்ரான் கான்.
சல்கோட் வர்த்தக சமூகம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை சேர்த்துள்ளதாகவும் இதனூடாக இந்த கொடுப்பனவு அனுப்பி வைக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலும் நினைவேந்தல் நடந்துள்ளதுடன் இஸ்லாத்தின் பெயரால் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் பாகிஸ்தானின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment