டொலர் தட்டுப்பாடு தீவிரம்; மேலும் கட்டுப்பாடு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 December 2021

டொலர் தட்டுப்பாடு தீவிரம்; மேலும் கட்டுப்பாடு!

 



நாட்டில் டொலர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டி நேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உபகரணங்கள் தவிர்த்து ஏனைய அனைத்து இறக்குமதிகளையும் நிறுத்தி வைக்க நேர்ந்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, டொலர் பிரச்சினையை சமாளிக்க சில நாடுகளோடு பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment