நானு ஓயா முதல் நுவரெலிய வரை கேபிள் கார் நிர்மாண திட்டம் சுவீடன் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு.
18 மாதங்களில், இரு கட்டங்களாக நிறைவுறும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 வருட குத்தகை அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment