பாகிஸ்தான், சல்கொட் நகரில் இடம்பெற்ற இலங்கையர் கொலை விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கை எடுத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார் அஸ்கிரி மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்.
சம்பவத்தை உடனடியாகக் கண்டித்து, துரித நடவடிக்கைகளை எடுத்த இம்ரானின் செயற்பாடு இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்ரான் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை மக்களுக்கும் தாம் வலியுறுத்தியுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment