முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிள்ளையானுடன் இணைந்து நாடகமாடுகிறார்கள் என அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் அவரை பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நசீர் அஹமட்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பரிக்கப்பட்டது தொடர்பிலும், அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த அழைப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
சாணக்கியனின் 'அறியாமையை' தெளிவு படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப்போவதாக நசீர் அஹமட் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment