மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் மீட்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 December 2021

மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் மீட்பு

 


உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ்  பிரிவில்  இன்று (8) காலை குறித்த  சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அத்துடன் சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை  பகுதிக்கு  பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை   பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அண்மைக்காலமாக நாடு பூராகவும் உள்ள கடற்கரைப்பகுதிகளில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதிங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


- பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment