எதிர்கால தேர்தல் காலங்களில் தாம் மக்கள் முன் வருவது உறுதியென தெரிவிக்கிறார் துமிந்த சில்வா. ஆயினும், தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையெனவும் தெரிவிக்கிறார்.
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு எதிர்பார்க்கப்பட்ட வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்த நிலையில் தற்போது வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக பொது நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையிலேயே, நாரேஹன்பிட்டியில் இடம்பெற்ற வீடு வழங்கும் நிகழ்வில் வைத்து தான் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்துக்காக மக்கள் முன் வரப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment