எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் புதல்வன் யோசித்த ராஜபக்ச புதிய, பாரிய எரிவாயு விநியோக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
சிலிண்டர் வெடிப்புகளின் பின்னணியில் லிட்ரோ நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் மாற்றுத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், யோசித்த புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க முனைவதும் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என பரவி வரும் தகவல்களின் பின்னணியிலேயே இவ்வாறு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment