நாட்டின் பல இடங்களில் இடம்பெற்று வரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் பாரிய சதித்திட்டத்தின் அங்கமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ.
ஒரு பக்கத்தில் லிட்ரோ நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் சிலிண்டர் வெடிப்புகள் ஊடாக எரிவாயு பாவனையை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வசதியுள்ளவர்கள் மின் அடுப்புகளை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் எனவும் இல்லாதவர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் ஹரின் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment