இரத்தினக் கல் வர்த்தக நோக்கில் இலங்கை வந்து, அளுத்கம பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த சீன பிரஜையொருவர் தாக்கப்பட்டதன் பின்னணியில் விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை தவறான கோணத்தில் முடிவடைந்ததன் விளைவாக இத்தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றர்.
No comments:
Post a Comment