தான் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் எனக் கூறி பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலன்நறுவயில் இடம்பெற்ற இச்சம்பவத்தினை விசாரித்த குற்றத் தடுப்பு பிரிவினர், குறித்த நபர் பொலிஸ் சீருடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் 5000 ரூபா கள்ள நோட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சீப்புக்குளம பகுதியைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment