நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அதிகரிக்கும் தேவையிருப்பதாக நிதியமைச்சருக்கு 'அறிவுரை' வழங்கியுள்ளார் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால்.
பெற்றோல் விலையை 35 ரூபாவாலும், டீசல் விலையை 24 ரூபாவாலும் மண்ணெண்னை விலை 11 ரூபாவாலும் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பெற்றோல் 20 ரூபாவாலும், டீசல் மற்றும் மண்ணெண்னை 10 ரூபாவாலுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக 'தற்போதைக்கு' அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment