சட்டவிரோதமான முறையில் பணம் பெறும் அல்லது அனுப்பும் வங்கிக் கணக்குகளை முடக்கப் போவதாக அறிவித்துள்ளார் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சட்டரீதியாக மாத்திரமே நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் சட்டவிரோத வழிகளை நாடக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வகை தொகையின்றி பணம் அச்சிட்டு வருவதாக குற்றச்சாட்டு வெளியிடப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment