தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை மற்றும் பொருளாதார பின்னடைவுகளின் பின்னணியில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்ட தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள ரணில், அண்மைக்காலமாக தேசிய பொருளாதாரம் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
உலகளாவிய ரீதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பெரும்பாலான நாடுகளின் மொத்த உள் நாட்டு உற்பத்தி பாரிய சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment