முஸ்லிம் அரசியல்வாதிகள் பிள்ளையானுடன் 'நாடகம்': சாணக்கியன் - sonakar.com

Post Top Ad

Friday, 10 December 2021

முஸ்லிம் அரசியல்வாதிகள் பிள்ளையானுடன் 'நாடகம்': சாணக்கியன்

 


தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும்.


விசேடமாக நீங்கள் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், இதற்கு ஆதரவாக வாக்களிக்க நீங்கள் நில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.


“நீண்டகாலமாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முகநுால் பதிவுகளுக்காக சிறைகளிலுள்ளவர்களின் விடுதலை, வடக்கு - கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துங்கள்.“ என நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.


அதேபோன்று இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், 'ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விடுதலை, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாசாங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதனை நிறுத்துக்கள், ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினை கலையுங்கள்.“ உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.


மேலும் அண்மையில் கிண்ணியாவில் படகுவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அங்கே சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் இங்கே களனிபாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார்.' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment