காட்டு யானைகளுக்கு எதிராக விமலவீர சபதம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 December 2021

காட்டு யானைகளுக்கு எதிராக விமலவீர சபதம்

 


காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியாது போனால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். யானைகளின் தாக்குதலினால் தற்போது ஏற்படும் சேதங்களை அடுத்த வருடத்திற்குள் 50 வீதத்தால் குறைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார். அவ்வாறு முடியாவிட்டால் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தான் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் அவர் கூறினார்.


யானைகளினால் தேசிய உணவு உற்பத்தியில் 20 வீதமானவை அழிக்கப்பட்டு வருவதாகவும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.


- நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment