பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொலையான இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தொழிற்சாலையொன்றின் முகாமையாளராக பணி புரிந்து வந்த பிரியந்தவின் செயற்பாடொன்று திரிபு படுத்தப்பட்டு தூண்டப்பட்டதன் விளைவாக தீவிரவாத இயக்கமொன்றின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், எஞ்சிய உடற்பாகங்கள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சம்பவத்தின் பின்னணியிலான பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிகழ்வின் விசாரணையை தானே நேரடியாக மேற்பார்வை செய்வதாக பாக். பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment