பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்ப சகிதம் இந்தியா சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் சொந்த செலவிலேயே சென்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் பெரும் பொருட்செலவில் அவர் அங்கு சென்றதாகவும் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவாலயத்தில் பிரதமர் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment