வெளிநாட்டவரை திருமணம் செய்ய 'புதிய' நிபந்தனை - sonakar.com

Post Top Ad

Sunday, 26 December 2021

வெளிநாட்டவரை திருமணம் செய்ய 'புதிய' நிபந்தனை

 


வெளிநாட்டவருடன் இலங்கைப் பிரஜையொருவர் திருமணம் செய்வதற்கு மேலதிக பாதுகாப்பு உறுதிப்படுத்தல் (security clearance) சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு பிரஜையின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் சிவில் நிலைப்பாடு பற்றிய தகவலுக்கு மேலாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலைப் பெற்ற பின்னரே திருமணம் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வெளிநாட்டவரின் உடல்நலன் குறித்த சுய பிரகடனமும் அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் திருமண பதிவாளர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் விபரங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment