ஒமக்ரோன் தொற்று அபாயத்தின் பின்னணியில் ஆறு ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா இப்புதிய வகை கொரோனா பற்றி அறிவித்ததன் பின்னணியில் உலகின் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், இலங்கையில் இதுவரை ஒமக்ரோன் பரவலுக்கான சாத்தியக்கூறு இல்லையென தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment