பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி! - sonakar.com

Post Top Ad

Saturday, 25 December 2021

பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி!

 


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சக பொலிஸ் ஊழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிசார் பலியாகியுள்ளனர்.


பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் ஊழியர்களே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.


தனது விடுமுறை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கோபத்தில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடாத்தி விட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தேடல் நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment