இலங்கை - ஐக்கிய அரபு அமீரகமிடையே நல்லிணக்க அடிப்படையில் எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமீரக இராஜாங்க அமைச்சர் அஹமட் பில் அலி சயி.
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தலிபானின் மீளெழுச்சிக்குப் பின் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைக் கையாள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு - வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment