கைது செய்யப்பட்ட நபர்களை நாடகமாடி கொலை செய்யும் கலாச்சாரத்தை அரசு கை விட வேண்டும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
கைதிகளை ஆயுதம் தேட அழைத்துச் செல்வதும் சென்ற இடத்தில் அவர்களோடு துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாகக் கூறி இறுதியில் கைதி இறப்பதும் உலகில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நாடகம் என அவர் தெரிவிக்கிறார்.
முக்கிய பாதாள உலக பேர்வழிகள் பலர் இவ்வாறு அண்மையில் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment