கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது அரசியல் ரீதியாக உபவேந்தர் நியமனம் பெற்ற முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் கையால் தமது சான்றிதழ்களைப் பெற மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
எனினும், பட்டமளிப்பு விழா இடம்பெற்றதோடு தேரர் திட்டமிட்டபடி சான்றிதழ்களை வழங்கியிருந்தார். ஆயினும், சில மாணவர்கள் தமது கொள்கையில் உறுதியாக இருந்து தேரரை புறக்கணித்துள்ளனர்.
அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தேரருக்கு உபவேந்தர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment