அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள் என அனைத்தையும் குழப்பியடித்துள்ள நடைமுறை ஆட்சியாளர்கள் நாட்டை படு மோசமான நிலைக்குத் தள்ளி விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அரசுக்குள் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறவும் முடியாதுள்ளதாகவும், தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடுமையான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லையெனவும் சில ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் வாதிட்டு மாற்றங்களைக் கொண்டு வந்ததாகவும் மைத்ரி விளக்கமளித்துள்ளார்.
எனினும், நடைமுறை அரசு வேகமாக பொருளாதாரத்தைக் குழப்பியுள்ளதால் மக்களின் வாழ்வியலைக் கட்டியெழுப்புவது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment